இந்த நாளும் விடிய துவங்கிய்து
ஒரு சாதாரண நாளூக்கான
எல்லாவிதமான அறிகுறிகளூடன்
சாலைகளில் வாகனங்களின்
உணர்ச்சியற்ற மெளன ஊர்வலம்...
பேரூந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்
கேள்விக்குறிகள் படர்ந்த
அதே சோக முகங்கள்..
இன்னும் சோம்பல் முறிக்கும்
சாலையோர மைனா...
இந்த நாளும் விடிய துவங்கிய்து
ஒரு சாதாரண நாளூக்கான
எல்லாவிதமான அறிகுறிகளூடன்
போகப் போகத்தான் தெரியும்..
