நிகழ்ந்தது அதிசயம்
குடிசை கோபுரமாகி வீடு மாளிகையானது
சினிமாவை போல இது நடந்தது ஒரு பாடலில் அல்ல
ஆயிரம் வேலைக்காரர்கள் கை கூப்பிடும் தூரத்தில்
கோடீஸ்வரர்கள் பலர் இவனை காண காத்திருக்கும் வேளை
ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க இயலாத நிலை
ஆனால் இவன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான்
கனவு ஒரு அதிசயம்
விழித்தெழுந்த ஏழை ஆழ்ந்த சிந்தனையில்
அடுத்த வேளை உணவுக்காக!
No comments:
Post a Comment