Saturday, August 4, 2012

பொருள்வயின் பிரிவு - விக்ரமாதித்யன் நம்பி

அன்றைக்கு

அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.

நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது

சாரல் மழைபெய்து

சுகமான குளிர் வியாபித்திருந்தது


அயர்ந்து

தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்

அரவம் கேட்டு விழித்த சின்னவன்

சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்


இவள்

வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்

வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்

வாசல்வரை வந்து

வழியனுப்பி வைத்தாள... தாய்போல


முதல் பேருந்து

ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்

பிழைப்புக்காக

பிரிந்து வந்துகொண்டிருந்தேன்

மனசு கிடந்து அடித்துக்கொள்ள.


- விக்ரமாதித்யன் நம்பி

No comments:

Post a Comment